Archives: ஜூன் 2023

சுலபமான பணம்

1700களின் பிற்பகுதியில், கனடாவின் நோவா ஸ்கோடியா என்ற இடத்தில் அமைந்திருந்த ஓக் தீவில் ஒரு இளைஞன் ஒரு மர்மமான மனச்சோர்வைக் கண்டுபிடித்தார். கடற்கொள்ளையர்கள் அங்கே புதையலை மறைத்து வைத்திருக்கின்றனர் என்று ஊகித்து, அவரும் மற்ற இருவரோடு சேர்ந்து தோண்டத் தொடங்கினர். அவர்கள் எந்த புதையலையும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் அந்த வதந்தியானது அவரின் வாழ்க்கையின் பெரும்பான்மையை வீணடித்தது. தொடர்ந்த ஆண்டுகள் பல அதே பள்ளத்தை தொடர்ந்து தோண்ட ஆரம்பித்தனர் காலத்தையும் பொருட்செலவையும் வீணடித்தனர். தற்போது அந்த பள்ளம் 100 அடி (முப்பது மீட்டர்) ஆழம் கொண்டதாயிருக்கிறது. 

அதுபோன்ற எண்ணங்கள் மனிதனுடைய இருதயத்தை வெறுமையாக்கிவிடுகின்றன. அதுபோன்ற ஒருமனிதனின் திருக்கான எண்ணம் என்பதைக் குறித்த ஒரு சம்பவத்தை வேதம் பதிவிடுகிறது. கேயாசி, எலிசா என்னும் பிரம்மாண்டமான தீர்க்கதரிசியின் நம்பகமான வேலைக்காரனாய் வெகுநாட்கள் செயல்படுகிறான். குஷ்டரோகத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டதால் சீரிய தேசத்தின் படைத்தளபதி எலிசாவுக்கு கொடுத்த விலையேறப்பெற்ற பரிசை அவன் ஏற்க மறுத்துபோது, கேயாசி அவற்றை இச்சித்து, அவர்களுக்கு பின்னாக சென்று அதை வாங்கிக்கொண்டான் (2 இராஜாக்கள் 5:22). ஆனால் கேயாசி வீடு திரும்பியபோது, அவன் எலிசாவிடம் பொய் சொல்லுகிறான் (வச. 25). ஆனால் எலிசாவுக்கு அது தெரிந்துவிடுகிறது. அவன் அவனைப் பார்த்து, “அந்த மனுஷன் உனக்கு எதிர்கொண்டுவரத்தன் இரதத்திலிருந்து இறங்கித் திரும்புகிறபோது என் மனம் உன்னுடன்கூடச் செல்லவில்லையா?” (வச. 26) என்று கேட்கிறார். கடைசியில் கேயாசி என்ன எதிர்பார்த்தானோ அதை பெற்றுக்கொண்டான், ஆனால் எது முக்கியமானதோ அதை இழந்துவிட்டான் (வச. 27). 

இயேசு, இந்த உலகத்தின் பொக்கிஷங்களை தேடாமல், “பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்” என்று நமக்குக் கற்பிக்கிறார் (மத்தேயு 6:20). 

உங்களின் இருதயத்தின் பொக்கிஷங்களை அடைவதற்கான குறுக்குவழியைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். இயேசுவைப் பின்பற்றுவது மட்டுமே, வெறுமையான உங்கள் இருதயத்தை நிரப்புவதற்கான சரியான வழி.

தியாகத்தை நினைவுகூருதல்

ஞாயிற்றுக்கிழமை காலை வழிபாட்டைத் தொடர்ந்து, எனது மாஸ்கோ ஹோஸ்ட் என்னை கோட்டைக்கு வெளியே உள்ள ஒரு உணவகத்தில் மதிய உணவுக்கு அழைத்துச் சென்றார். வந்துசேர்ந்தவுடன், திருமண உடையில் புதுமணத் தம்பதிகள் வரிசையாக கிரெம்ளின் சுவருக்கு வெளியே யாரென்று தெரியாத இராணுவ வீரரின் கல்லறையை நெருங்குவதை நாங்கள் கவனித்தோம். அவர்களுடைய அந்த மகிழ்ச்சியான நாளில், அந்த மகிழ்ச்சிக்கு காரணமான இராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும்பொருட்டு அவ்வாறு செய்வது அவர்களின் வழக்கம். அந்த புதுமணத் தம்பதிகள் அங்கே சென்று கல்லறையில் மலர் வளையம் வைத்து, புகைப்படம் எடுத்துக்கொள்வதை பார்க்க ஆச்சரியமாய் இருந்தது. 

நம்முடைய வாழ்க்கையில் நிறைவை உண்டாக்கும்பொருட்டு தியாகமாய் தங்களை அர்ப்பணித்தவர்களுக்கு நன்றிசெலுத்துவதற்கு நாமெல்லாரும் கடமைப்பட்டிருக்கிறோம். அந்த தியாகங்கள் அனைத்தும் முக்கியமற்றவைகள் அல்ல, அதேநேரத்தில் அவைகள் மிகவும் முக்கியமானவைகளும் அல்ல. சிலுவையின் அடிவாரத்தில் இயேசு நமக்காக செய்த பெரிய தியாகத்தைப் பார்க்கிறோம். நம்முடைய வாழ்க்கை எந்த அளவிற்கு முழுமையாக இரட்சகருக்குக் கடன்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள துவங்குகிறோம். 

கர்த்தருடைய பந்தியில் இடம்பெற்றிருக்கும் அப்பமும் திராட்சை ரசமும், இயேசுவின் சிலுவை தியாகத்தை நம்மை நினைவுகூரச்செய்கிறது. பவுல், “நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்” (1 கொரிந்தியர் 11:26) என்று எழுதுகிறார். கர்த்தருடைய பந்தியை அநுசரிக்கும் அந்த நாள் முழுவதிலும், இயேசு நமக்குள்ளும் நமக்காகவும் செய்த தியாகத்தை நாம் நினைவுகூரப் பிரயாசப்படுவோம்.

அவர் நம்மை புதிதாக்குகிறார்

ஒரு பயண நிர்வாகியாக, ஷான் சீப்லர் என்பவர் ஒரு வித்தியாசமான கேள்வியுடன் போராடினார். ஹோட்டல் அறைகளில் எஞ்சியிருக்கும் சோப்பு கட்டிகளை என்ன செய்வது? என்பதே அந்த கேள்வி. தூக்கியெறியப்படும் சோப்புத் துண்டுகளை மறுசுழச்சி செய்வதின் மூலம் அதற்கு மறுவாழ்வு கொடுக்க முடியும் என்று சீப்லர் நம்பினார். எனவே அவர் “கிளீன் தி வேர்ல்ட்” என்ற மறுசுழற்சி அமைப்பைத் தொடங்கினார். அது எண்ணாயிரத்திற்கும் மேற்பட்ட ஹோட்டல்கள், ஓய்வு விடுதிகள் போன்றவற்றில் நிராகரிக்கப்பட்ட மில்லியன் கணக்கான பவுண்டுகள் சோப்புத் துண்டுகளை கிருமி நீக்கம் செய்யப்பட்டு புதிதாக வடிவமைக்கப்பட்ட சோப்புகளாக மாற்ற உதவியது. அந்த சோப்புத் துண்டுகள் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தேவையுள்ள மக்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த சோப்புகள் சுகாதாரம் தொடர்பான வியாதிகள் மற்றும் மரணங்களிலிருந்து மக்களை பாதுகாக்கிறது குறிப்பிடத்தக்கது. 

சீப்லர் சொல்லும்போது, “இது கேட்பதற்கு விகற்பமாய் தெரியலாம், ஆனால் நீங்கள் தங்கியிருக்கும் அறையில் எஞ்சியிருக்கும் சிறிய சோப்பு துண்டானது ஒருவருக்கு வாழ்க்கைக் கொடுக்கலாம்” என்று சொல்லுகிறார். 

பயன்படுத்தப்பட்டு தூக்கியெறிப்பட்ட ஒன்றிற்கு வாழ்க்கைக் கொடுத்து புதிதாக்குவது நம்முடைய இரட்சகரான இயேசுவின் முக்கியமான ஒரு செய்கை. ஐந்து அப்பத்தினாலும் இரண்டு சிறிய மீன்களினாலும் ஐயாயிரம்பேரை இயேசு போஷித்த பின்பு, சீஷர்களைப் பார்த்து, “ஒன்றும் சேதமாய்ப் போகாதபடிக்கு மீதியான துணிக்கைகளைச் சேர்த்துவையுங்கள்” (யோவான் 6:12) என்று சொல்லுகிறார். 

நம்முடைய வாழ்க்கையில் நாம் தூக்கியெறிப்படும்போது, இயேசு நம்மை வீணானவர்களாய் பார்க்காமல், நம்முடைய வாழ்க்கையை அற்புதமாய் பார்;க்கிறார். அவருடைய பார்வையில் நாம் எப்போதும் தூக்கியெறிப்படுவதில்லை. அவருடைய இராஜ்யத்திற்கு பயன்படும் திறனை நமக்குள் புகுத்துகிறார். “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின!” (2 கொரிந்தியர் 5:17). எது நம்மை புதிதாக்குகிறது? கிறிஸ்து நமக்குள் வாசம்பண்ணுவதே நம்மை புதியவர்களாய் மாற்றுகிறது. 

தேவனுடைய மகத்தான வல்லமை

திசைமாற்றியபோது சாத்தியமற்ற ஒன்று நிகழ்ந்தது. ஆகஸ்ட் 2021இல், ஐடா என்ற சூறாவளிக் காற்று, லூசியானா கடற்கரையில் கரையொதுங்கியது. அங்கே ஆச்சரியமான “எதிர்மறையான ஓட்டத்தை” தோற்றுவித்தது. பலமணி நேரங்கள் தண்ணீர் மேல்நோக்கி பாய ஆரம்பித்தது. 

ஒரு சூறாவளியானது அதன் வாழ்க்கைச் சுழற்சியில் பத்தாயிரம் அணுகுண்டுகளுக்குச் சமமான ஆற்றலைச் செலவழிக்கும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்! ஓடும் நீரின் போக்கை மாற்றும் இத்தகைய நம்பமுடியாத ஆற்றலானது, யாத்திராகமத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள சம்பவத்தில் இடம்பெற்றுள்ள “எதிர்மறையான ஓட்டத்தை” எனக்கு நினைவூட்டியது. 

நூற்றாண்டுகளாய் எகிப்தியரிடம் அடிமைப்பட்டிருந்த இஸ்ரவேலர்கள் அங்கிருந்து புறப்பட்டு செங்கடலின் கரைக்கு வந்து சேர்கின்றனர். அவர்களுக்கு முன்பாக பெரிய சமுத்திரமும், அவர்களைத் துரத்திக்கொண்ட பார்வோனின் சேனைகளும் வந்துகொண்டிருந்தது. அதுபோன்ற சாத்தியமற்ற சூழ்நிலைகளில், “கர்த்தர், இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப்பண்ணினார்... இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள்” (யாத்திராகமம் 14:21-22). அந்த ஆச்சரியமான சம்பவத்தை சாட்சியிட்ட பின்பு, “ஜனங்கள் கர்த்தருக்குப் பயந்(தனர்)” (வச. 31). 

தேவனுடைய வல்லமையை சாட்சியிடும்போது ஆச்சரியத்தில் மூழ்குவது இயல்பானது. ஆனால் அதோடு மக்கள் நின்றுவிடவில்லை, தேவன் மீது “விசுவாசம் வைத்தார்கள்” (வச. 31). 

தேவனுடைய படைப்பில் அவருடைய வல்லமையை நாம் சாட்சியிடும்போது, நாமும் அவருடைய மகத்துவத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டு அவர் மீது நம்பிக்கை வைக்க முடியும். 

தயவின் வெகுமதி

 

ரூத்தை மணந்தவரின் பெயர் என்ன?” என்று கேட்டார். ஆறு வயது டாமி நம்பிக்கையுடன், “போவாஸ்!” என்று கத்தினான். ஆசிரியர் மற்றொரு கேள்வியை தொடர்ந்தார்: "ரூத்தை திருமணம்…

தயவின் சான்று

 

தேவன் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வார் (வ. 6) (எபேசியர்:2:1-10)

பல குழந்தைகளும் அவர்களது பெற்றோர்களும் புதியதாக பிறந்திருக்கும்…